ரஜினி பட வசன டைட்டிலில் உருவாகும் நட்டி நட்ராஜின் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வித்தியாசமான தலைப்புகளில் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் ரஜினி பட தலைப்புகள், ரஜினியின் வசனங்களையே தலைப்புகளாக கொண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்து. அந்த வகையில் 'இது எப்படி இருக்கு', 'என் வழி தனி வழி' , 'கதம் கதம்' ,'போடா ஆண்டவனே நம்ம பக்கம்' ஆகிய தலைப்புகளில் படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'முள்ளும் மலரும்' படத்தில் இடம்பெற்ற மாஸ் வசனமான 'கெட்ட பையன் சார் இந்தக் காளி' என்ற வசனத்தை தழுவி 'கெட்ட பையன் சார் இவன் ' என்கிற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.
சதுரங்க வேட்டை' நாயகன் நட்டி நட்ராஜ் நடித்து வரும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கி வருகிறார். மிகப்பிரபலமான இயக்குனரின் மகனாக இருந்தும், முறைப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களிடம் உதவியாளராக இருந்து தற்போது இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி மகன் ஏ.எச்..காஷிஃப் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பி.சி.ஸ்ரீராமின் மாணவர் கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில், பிரபல எடிட்டர் லெனின் அவர்களின் மாணவர் செந்தில் சிவகுமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
பல பிரபலங்களின் உதவியாளர்கள் மற்றும் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாகும் இந்த படத்தை '6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் ' (6 FACE STUDIOS) என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிறுவனத்த்தின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com